சேலம் சரக காவல்துறையின் தேர்தல் பணி ஆய்வுக் கூட்டம்

சேலம் மாநகர் மற்றும் சேலம் சரகம் பகுதிகளில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து 06/04/19ஆம் தேதி சேலம் மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.  ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு காவல் துறை இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு தமிழ்நாடு  திரு.விஜயகுமார் IPS அவர்கள் விரிவான ஆய்வினை மேற் கொண்டார்கள். ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தனித்தனியே ஆய்வினை நடத்தினார்கள். காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னால் காவல்துறையினர் அனைவரையும் முழு அளவில் பயன்படுத்தி இப்போது தேர்தலில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல்  பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் சேலம் மாநகர காவல் ஆணையாளர், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர், சேலம் சரகத்தில் உள்ள நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.