அருவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடிகள் கைது
சேலம் மாநகரம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூரி என்கிற சூரியமூர்த்தி மகன்களான போக்கிரிகள் ஜீசஸ்(a) jesuraj, மோசஸ் என்கிற குட்டியப்பன், சிலம்பரசன் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய ஐந்து பேர் 04/04/2019 ஆம் தேதி கிச்சிப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலம்பரசன் மற்றும் ஜீசஸ்(a)ஜேசுராஜ் ஆகியோர் மீது பத்துக்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, வழிபறி, ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்ட வழக்குகள் உள்ள நிலையில் இவர்கள் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சிலம்பரசன் மீது மூன்று முறையும், ஜீசஸ் (a) ஜேசுராஜ் மீது இரண்டு முறையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய சரித்திர பதிவேடு கொண்ட போக்கிரி என மோசஸ் (a) குட்டியப்பன் மீதும் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மீதும் மற்றொரு போக்கிரி வெங்கடேஷ் என்பவர் மீதும் கடந்த 2016ஆம் வருடம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சிலம்பரசன் ஜீசஸ் என்கிற ஜெயராஜ் மோசஸ் என்கிற குட்டியப்பன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கடந்த 2014ஆம் வருடம் சேலம் நீதிமன்றத்தில் தங்களுடைய எதிரிகள் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். 03/04/19 ஆம் தேதி போக்கிரி ஜீசஸ் (எ) ஜேசுராஜ் என்பவரின் பிறந்த நாளை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முனியப்பன் கோவில் அருகில் வைத்து அருவாளால் கேக் வெட்டி கொண்டாடிய போது அதனை தட்டிக் கேட்ட ஒருவரை மேற்படி போக்கிரிகள் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. சம்மத பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்த கிச்சிப்பாளையம் போலிஸாரை பொது மக்கள் மனதார பாராட்டினர்.


