இருசக்கர வாகன திருடர்களைப் பிடித்து சுமார் ரூபாய் 2,30,000 மதிப்புள்ள இருசக்கர வாகனங்களை மீட்ட போலீசாருக்கு பாராட்டு

09.03.2019 சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் சரகம் மற்றும் பள்ளப்பட்டி காவல் சரகத்தில் காணாமல் போன இரண்டு சக்கர வாகன திருடர்களை பிடிக்க,காவல் உதவி ஆணையர் திரு.சேகர் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் திரு .செந்தில், சூரமங்கலம் காவல் நிலையம். திரு. சாலைராம் சக்திவேல், பள்ளப்பட்டி காவல் நிலையம்.SSI.திரு. மாதேஷ், தலைமை காவலர்கள் திரு. ராமகிருஷ்ணன், திரு.முருகன், திரு. பாலசுப்பிரமணியன், திரு.மகேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. புலன் விசாரணையில் 09/03/19ஆம் தேதி இரண்டு சிறார் உட்பட அருணாச்சலம் மற்றும் ஆனந்த் என்ற குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்களை மீட்டு குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்ட மேற்கு சரக குற்றப் பிரிவு போலீசாரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டி ஊக்குவித்தார்.

இது போன்ற சேலம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவு செய்ய வேண்டுமா? எப்போதும் இனைந்திருங்கள் www.oursalem.com மேலும் நம்ம பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்ய ?இங்கே கிளிக்? செய்யவும்