செல்போன் திருடர்களை பிடித்துக் கொடுத்த பொதுமக்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் பாராட்டு

சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகம் புதிய பேருந்து நிலையத்தில் 01/04/19ஆம் தேதி மதியம் மணிகண்டன் என்பவர் பேருந்திலிருந்து கீழே இறங்கும் போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போனை இரு நபர்கள்  பறித்துக் கொண்டு ஓடினர். மணிகண்டன் சத்தம் போட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உதவியோடு செல்போன் திருடிய நபர்களை கையும் களவுமாக பிடித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் திரு. அயூப்கான் அவர்கள் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் செல்போனை பறித்து சென்றவர்கள் சேலம் கிச்சி பாளையத்தை சேர்ந்த சுரேஷ் வயது 36 மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஆண்ட முத்து வயசு 48 என தெரியவந்தது.வழக்கில் கண்ட குற்றவாளிகளிடமிருந்து சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மீட்டு,செல்போன் திருடர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க உதவிய பொதுமக்களை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.