நூதன இரு சக்கர  வாகன திருடனை கைது செய்த போலிசாருக்கு பாராட்டு 

 சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் சரகம் காந்தி ரோடு அருகே 02/04/19 ஆம் தேதி சர்வீசுக்கு விட்ட தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என சீனிவாசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.பொன் ராஜ் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். சிறப்பு உதவி ஆய்வாளர்  திரு.துரை மற்றும் தலைமை காவலர்கள் திரு.இரத்தினம், திரு. பெரியசாமி  ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் 04/04/19ஆம் தேதி CCTV உதவியுடன் குற்றவாளி கணபதி வயது 25 (அம்பாள் ஏரி, தாதகாப்பட்டி கேட், சேலம்) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு இரு சக்கர வாகனங்களை மீட்டு  குற்றவாளியை சிறையில் அடைத்தனர். குற்றவாளி மிகவும் நூதனமான முறையில் வாகனத்தை சர்வீசுக்கு விடுவது  போல் பாவனை செய்து இரு சக்கர வாகன சர்வீஸ் சென்டரில் இருந்து வாகனங்களை திருடியது தெரிய வந்துள்ளது. குற்ற வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த அஸ்தம்பட்டி போலீசாரை காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்.