சேலம் மழை வெள்ளத்தால் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 16 வயது சிறுவன் உடல் மீட்பு நேரடி காட்சிகள் :

சேலம்: சேலம் நாராயணநகரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 16 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டுள்ளது. மாணவன் ஆசாத் உடலை 24 மணி நேர போராட்டத்துக்கு பின் மாநகராட்சி பணியாளர்களும், பொது மக்களும் மீட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சேலத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. தேங்கி நின்ற மழைநீரால் சாலை எது பள்ளம் எது எனத்தெரியாமல் கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுவன் உடல் மீட்கப்பட்டுள்ளது.