சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையாளர் கராத்தே நடராஜன் 19 நிமிடங்களில் மூக்கு வழியாக 100 பலுன்களை ஊதி சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை ஊராட்சி தாடிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் கின்னஸ் சாதனையாளர் கரத்தே நடராஜன். இவர் பாரம்பரிய கலை பயிற்சி பள்ளி ஒன்றினை நேற்று தொடங்கினார்.

அதனை தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வாக மூக்கு வழியாக 19 நிமிடத்தில் 100 பலூன்களை ஊதி வேர்ல்ட் சூப்பர் டேலண்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தார்.