*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 14_*

*28.05.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

நிர்வாகம் சம்பந்தமான பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : மதிப்பு உயரும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பணி சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். தலைமை அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைக்க முயல்வீர்கள். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : சேமிப்பு உயரும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பணியில் நிதானத்துடன் செயல்பட்டு எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த உதவிகளில் காலதாமதம் ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவாதிரை : புதிய வாய்ப்புகள் அமையும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

சபை தலைவராக இருப்பவர்கள் பணியாளர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அரசாங்கம் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வீண் அலைச்சல்கள் நேரிடலாம். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பயணங்களில் சில தடைகள் நேரிடலாம். தம்பதிகளுக்கிடையே மனக்கசப்புகள் வந்து போகும். வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களில் சற்று கனிவுடன் பேசவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : வேறுபாடுகள் தோன்றும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : கனிவு வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : திருப்தியான சூழல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். கடிதத்தின் மூலம் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : சுபச் செலவுகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். திருமண முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அனுஷம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : மதிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். தொழிலை அபிவிருத்தி செய்ய போதுமான நிதி உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
பூராடம் : உறவு மேம்படும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். உரையாடலில் கவனம் தேவை. சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.
அவிட்டம் : பேச்சில் நிதானம் வேண்டும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். உயர் பதவிக்கான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் இன்பமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
சதயம் : இன்பமான சூழல் அமையும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசு சம்பந்தமான காரியங்களில் எண்ணிய எண்ணம் ஈடேறும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : புதிய சிந்தனைகள் தோன்றும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•