*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 12_*
*_26.01.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மனதில் தோன்றும் புதிய எண்ணங்களாலும் சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டிகளால் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அசுவினி : செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும்.
பரணி : ஜெயம் உண்டாகும்.
கிருத்திகை : உறவுநிலை மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான சில யுக்திகளை கற்பீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : சில யுக்திகளை கற்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தாயினால் சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவாதிரை : ஆசிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : நினைவாற்றல் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழிலில் நீங்கள் கையாளும் புதிய யுக்திகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். வெளிநாட்டு தொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய பலன் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : இலாபகரமான நாள்.
பூசம் : வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பொது நலத்திற்காக நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திருமண வரன்கள் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூரம் : புதிய நட்பு கிடைக்கும்.
உத்திரம் : உயர்வான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
அஸ்தம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
சித்திரை : தேடல் பிறக்கும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
காது சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் நட்பால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : புகழ் உண்டாகும்.
அனுஷம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
கேட்டை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாக அமையும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். முக்கிய முடிவுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூராடம் : செயல்களில் கவனம் தேவை.
உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : மதிப்பு உயரும்.
திருவோணம் : உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள்.
ரேவதி : ஒற்றுமை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
