*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_கார்த்திகை 03_*

*_19.11.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த, ஆதரவான சூழல் உண்டாகும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நன்மையை அளிக்கும். கருத்துக்களை பரிமாறுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி : முயற்சிகள் ஈடேறும்.

கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுவிதமான மாற்றமான சூழல் ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.

ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : தடைகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் மதிப்பு உயரும். சுயதொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொந்த ஊர் பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : தனவரவு மேம்படும்.

திருவாதிரை : லாபம் கிடைக்கும்.

புனர்பூசம் : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் மீதான மரியாதை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பூசம் : தீர்வு கிடைக்கும்.

ஆயில்யம் : மரியாதை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

வீண் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : சேமிப்பு உயரும்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத பயணமும், அதனால் தனலாபமும் கிடைக்கும். மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.

சித்திரை : தனலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வெளிவட்டாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நிதானத்துடன் செயல்படவும். சுயதொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுப்புகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை :வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : மேன்மையான நாள்.

சுவாதி : நிதானம் வேண்டும்.

விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அனுஷம் : நட்பு கிடைக்கும்.

கேட்டை : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். செய்யும் செயல்களில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறு சிறு வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டிய சூழல் அமையும். தேவையின்றி யாருக்காகவும் உறுதி அளிக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூராடம் : நிதானத்துடன் செயல்படவும்.

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் உறவினர்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் தகுந்த வழிகாட்டுதல் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் : மாற்றமான நாள்.

அவிட்டம் : கலகலப்பான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : எண்ணங்கள் நிறைவேறும்.

சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.

பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன் கிடைக்கும். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். திருமணம் தொடர்பான வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். சொந்த பந்தங்களின் சூளுகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : பூமி விருத்தி உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•