*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 05_*
*_19.03.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு பணி சம்பந்தமான கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயில்பவர்களின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். உறவினர்களிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். கடன் சார்ந்த சில பிரச்சனைகள் தோன்றி மறையும். மாணவர்கள் தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. மனை சார்ந்த விவகாரங்களில் சற்று சிந்தித்துச் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : கவனத்துடன் செல்லவும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிடம் : சிந்தித்துச் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஜெயம் காண்பீர்கள். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். அறச்செயல்களால் நற்பேறுகள் உண்டாகும். சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : ஜெயம் காண்பீர்கள்.
திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : நற்பேறுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமனின் உறவுநிலை மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : உறவுநிலை மேம்படும்.
ஆயில்யம் : எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் தனவிருத்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூரம் : திறமையால் இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : தனவிருத்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். மனச்சோர்வுகளால் வேலையில் கவனமின்றி வசைச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : பயணங்களால் மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
சுவாதி : இழுபறிகள் குறையும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். புதுவிதமான தொழில் நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முயற்சிகள் கைக்கூடும்.
அனுஷம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
கேட்டை : புதிய வித்தைகளை பயில்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தானிய சம்பத்துக்களால் இலாபம் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறையும். பிறரிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.
பூராடம் : சோர்வு நீங்கும்.
உத்திராடம் : வெற்றி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ளவும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : வாதத்தை தவிர்க்கவும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆன்மீக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்
உத்திரட்டாதி : சுமூகமான முடிவு கிடைக்கும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
