*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_கார்த்திகை 01_*

*_17.11.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வாக்குவன்மையால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகளை தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : பாராட்டப்படுவீர்கள்.

பரணி : தீர்வு கிடைக்கும்.

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுயதொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வியாபாரத்தில் புதிய வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் மூலம் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். அரசு காரியங்களில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.

திருவாதிரை : லாபம் உண்டாகும்.

புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சிறு மாற்றங்களின் மூலம் லாபமடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் மேம்படும்.

பூசம் : காரியசித்தி உண்டாகும்.

ஆயில்யம் : நட்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு செயல்படுவது நன்று. பொருளாதாரம் சார்ந்த சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

பூரம் : புரிந்து செயல்படவும்.

உத்திரம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வீடு மற்றும் வாகனங்களை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.

அஸ்தம் : மரியாதைகள் அதிகரிக்கும்.

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்கலாம். பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் அமையும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : திட்டமிட்டு செயல்படவும்.

சுவாதி : நிதானம் வேண்டும்.

விசாகம் : மனவருத்தங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பேச்சில் நிதானம் வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : ஆசிகள் கிடைக்கும்.

அனுஷம் : அனுபவம் உண்டாகும்.

கேட்டை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மனதில் சஞ்சலமான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்ப விவகாரங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துக் கொள்வதை தவிர்க்கவும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறதியால் சில காலதாமதங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : அமைதி வேண்டும்.

பூராடம் : வாக்குறுதியை தவிர்க்கவும்.

உத்திராடம் : அலைச்சல் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். சோர்வு மற்றும் களைப்பு நீங்கும். உறவினர்களை பற்றி புரிந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் லாபகரமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.

திருவோணம் : புரிந்துக்கொள்வீர்கள்.

அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகம் சார்ந்த பணிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களுடன் விருந்து, விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சதயம் : வெற்றி கிடைக்கும்.

பூரட்டாதி : மகிழ்ச்சி அடைவீர்கள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு உயரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

ரேவதி : தனவரவு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•