*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 02_*

*17.06.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். செய்யும் செயல்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப பெரியவர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : இலாபம் கிடைக்கும்.
பரணி : பாராட்டப்படுவீர்கள்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை கூறுவதை தவிர்க்கவும். சுரங்கம் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : விமர்சனங்களை தவிர்க்கவும்.
மிருகசீரிடம் : கவனத்துடன் செயல்படவும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

திருமணப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தடை மற்றும் தாமதங்கள் நீங்கும். மனதிற்கு விருப்பமானவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு இலாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : தடைகள் நீங்கும்.
திருவாதிரை : விருப்பங்கள் நிறைவேறும்.
புனர்பூசம் : செல்வாக்கு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பொருளாதாரத்தில் ஏற்ற-இறக்கமான சூழல் ஏற்படும். வழக்குகள் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வீடு வாங்குவதற்கான கடன் வாய்ப்புகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.
பூசம் : காலதாமதம் உண்டாகும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

சொத்துப் பிரிவினைகளில் நல்ல முடிவு கிடைக்கும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். மாணவர்கள் ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள். புதிய வீடு கட்டும் எண்ணங்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : தடைகள் அகலும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வருமான உயர்விற்கான முயற்சிகள் மேம்படும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் இனிதே நடக்கும். தொழிலை விரிவு செய்து புதிய பங்குதாரர்களையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
சுவாதி : முயற்சிகள் மேம்படும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்பத் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்வீர்கள். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நண்பர்களுக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கண் சம்பந்தமான உபாதைகள் குறையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
அனுஷம் : உபாதைகள் குறையும்.
கேட்டை : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மனதில் எண்ணிய எண்ணங்களும், திட்டங்களும் செயல் வடிவம் பெறும். எதிர்ப்புகள் மறையும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சாதகமாக வாய்ப்புகள் அமையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எதிர்பாராத சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வீடு, மனை போன்றவற்றை விற்பது மற்றும் வாங்குவது பற்றிய சிந்தனைகள் உண்டாகும். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் சம்பந்தமான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : சுபிட்சமான நாள்.
திருவோணம் : மனக்கசப்புகள் மறையும்.
அவிட்டம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்தியோகஸ்தரர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்டகாலமாக இருந்து வந்த சொத்துப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மற்றும் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சதயம் : உயர்வான நாள்.
பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தொழிலில் எண்ணிய வருமானம் கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய தொழில் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். சொந்த ஊர் பயணம் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.
உத்திரட்டாதி : அபிவிருத்தி உண்டாகும்.
ரேவதி : எண்ணங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•