*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆவணி 30_*

*16.09.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். மனதில் தோன்றிய தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகளில் எண்ணிய பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : கவனம் வேண்டும்.

பரணி : உதவிகள் கிடைக்கும்.

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவியால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். பொருளாதார மேன்மை உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்களை விரைவில் முடிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும்.

மிருகசீரிடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தனவரவில் இருந்து வந்த தடைகள் அகலும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :
8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிடம் : கவலைகள் நீங்கும்.

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : தடைகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவியால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். இளைய சகோதரர்களினால் ஆதாயம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :
2

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

பூசம் : செயல்பாடுகள் மேலோங்கும்.

ஆயில்யம் : கவலைகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :
1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். இளைய சகோதரர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். மனைவிவழி உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :
5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : வெற்றி அடைவீர்கள்.

அஸ்தம் : அனுகூலமான நாள்.

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் துறையில் உண்டான போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :
4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : நுட்பங்களை கற்பீர்கள்.

சுவாதி : மனச்சோர்வு உண்டாகும்.

விசாகம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். புத்திரர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :
9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : விரயங்கள் உண்டாகும்.

அனுஷம் : புதிய நட்பு கிடைக்கும்.

கேட்டை : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :
3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : கவலைகள் நீங்கும்.

உத்திராடம் : வெற்றி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணியில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்க்சி அடைவீர்கள். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :
8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : செல்வாக்கு உயரும்.

திருவோணம் : தேவைகள் நிறைவேறும்.

அவிட்டம் : முன்னுரிமை கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பொதுக்கூட்டப் பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதி காக்கவும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :
3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.

சதயம் : அலைச்சல்கள் உண்டாகும்.

பூரட்டாதி : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். பொருட்கள் சேர்ப்பதற்கான கலையறிவு மேம்படும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :
6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : சுபிட்சம் உண்டாகும்.

ரேவதி : கலையறிவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•