*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*
*_மாசி 04_*
*16.02.2020*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்வது நன்மையை அளிக்கும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுக்கவும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : செயல் வேகம் அதிகரிக்கும்.
பரணி : ஆலோசித்து செயல்படவும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
நண்பர்களின் ஆதரவால் மேன்மை உண்டாகும். தொழிலில் புதிய நபர்களை கூட்டாளிகளாக சேர்ப்பீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகள் முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிஷம் : பணிகள் நிறைவடையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கூட்டாளிகளால் விரய செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கெளரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். மனதில் உள்ள சங்கடங்கள் குறைந்து தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : தெளிவு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : செலவுகள் குறையும்.
பூசம் : விருப்பங்கள் நிறைவேறும்.
ஆயில்யம் : தனவரவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அளவாக பழகுவது உத்தமம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : பொறுப்புகள் உயரும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.
அஸ்தம் : சூட்சமங்களை கற்பீர்கள்.
சித்திரை : தைரியத்துடன் செயல்படுவீர்கள்
•┈┈•❀??????❀•┈┈•
*துலாம்:-*
பயணங்களால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுப்பீர்கள். புது அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். புத்திரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : ஆசிகள் கிடைக்கும்.
விசாகம் : மதிப்பு உயரும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தொழிலில் புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள். மன தைரியத்துடன் செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். இளைய உடன்பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமைகள் உண்டாகும். எடுத்த காரியங்களை முடிக்க பொறுமையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : புதிய திட்டங்கள் தோன்றும்.
அனுஷம் : பெருமைகள் உண்டாகும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தனவரவுகளால் சேமிப்பு உயரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய முயற்சிகள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : சேமிப்பு உயரும்.
பூராடம் : வேறுபாடுகள் ஏற்படலாம்.
உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*மகரம்:-*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதைகள் உயரும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : கலகலப்பான நாள்.
திருவோணம் : மரியாதை உயரும்.
அவிட்டம் : மரியாதை உயரும
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
புதிய எண்ணங்களுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உயர் பதிவிகள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் தேவை. எதிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்படும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.
சதயம் : திருப்தியற்ற நாள்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பதவி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் சீராகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். கால்நடைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம். வாகன அபிவிருத்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : தனலாபம் மேம்படும்.
ரேவதி : சாதகமான நாள்
•┈┈•❀??????❀•┈┈•
