*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 30_*

*_13.04.2019_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமான பலனை அளிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : செல்வாக்கு அதிகரிக்கும்.
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். செய்தொழிலில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். சுபச் செய்திகள் கைக்கூடி வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் நிதானம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி எண்ணியவை ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும்.
ரோகிணி : இலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : எண்ணியவை ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும். செயல்வேகம் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் சாதகமான பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மிருகசீரிடம் : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
திருவாதிரை : உடைமைகளில் கவனம் தேவை.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

திருமண வரன்கள் கைக்கூடி வரும். சர்வதேச வணிகத்திலிருந்த சில தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வழக்குகளில் புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : திருமண வரன்கள் கைக்கூடும்.
பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

நண்பர்களுடன் சேர்ந்து உல்லாசப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுரங்கம் சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேள்வியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வெளிநாடு தொடர்பான பயணங்களால் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் அமையும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான சூழல் அமையும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். சொந்த ஊர் பயணம் மனதிற்கு புதுவிதமான மாற்றத்தை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : நிதானத்துடன் செயல்படவும்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் செய்யும் செயல்களால் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தை வழி சொத்துகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இணையதளம் தொடர்பான தொழிலில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம் : செல்வாக்கு உயரும்.
கேட்டை : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் மனச்சோர்வு உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகமாகும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூராடம் : கவனம் தேவை.
உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எதிர்ப்பை தாண்டி திட்டமிட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் மேம்படும். புதிய வேலைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : வெற்றி காண்பீர்கள்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வாக்குறுதிகளை தரும்போது சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் கவனத்துடன் இருக்கவும். உடன்பிறந்த சகோதரர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•