*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_கார்த்திகை 26_*

*_12.12.2019_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் புதிய செயல்களால் தனலாபம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறக் கூடிய அனுகூலமான நாள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.

பரணி : அனுகூலமான நாள்.

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான தீர்ப்புகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.

ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் வகுத்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். உடன்பிறப்புகளிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். போட்டிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : செயல்திட்டம் வகுப்பீர்கள்.

திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான பயணங்கள் கைகூடும். சுயதொழில் சார்ந்த முயற்சிகளில் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : பயணங்கள் கைகூடும்.

ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணத்தால் மாற்றம் உண்டாகும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : மாற்றம் உண்டாகும்.

உத்திரம் : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அஸ்தம் : மனக்கசப்புகள் குறையும்.

சித்திரை : உயர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : கவனம் வேண்டும்.

சுவாதி : சிந்தித்து செயல்படவும்.

விசாகம் : அலைச்சல்கள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகலாம். புதிய கலைகளை கற்க ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : நிதானம் வேண்டும்.

கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : இலாபம் அதிகரிக்கும்.

பூராடம் : சிக்கல்கள் நீங்கும்.

உத்திராடம் : உறவுகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகள் மேற்கொள்வீர்கள். புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

திருவோணம் : இலாபம் அதிகரிக்கும்.

அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மனதிற்கு பிடித்த ஆபரண அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். புத்திரர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

பூரட்டாதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரேவதி : குழப்பங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•