*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 25_*

*12.10.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். செய்யும் வேலைகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : இலாபம் உண்டாகும்.

பரணி : சுபிட்சமான நாள்.

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய முயற்சிகளால் சாதகமான சூழல் அமையும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் முன்னேற்றத்தை அளிக்கும். உடனிருப்பவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.

ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : ஆதாயம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

நண்பர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். தொழிலில் கூட்டாளிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களின் மூலம் இலாபம் மற்றும் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

ஆயில்யம் : மதிப்புகள் உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செய்யும் வேலைகளில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சம்பந்தமான பயணங்களில் கவனம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : காலதாமதம் உண்டாகும்.

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். உறவினர்களிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அஸ்தம் : முயற்சிகள் சாதகமாகும்.

சித்திரை : செயல்வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்துவீர்கள். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : தைரியம் அதிகரிக்கும்.

சுவாதி : அனுசரித்து செல்லவும்.

விசாகம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனை தொடர்பான விவகாரங்களில் இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பூர்வீகம் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

விசாகம் : இலாபம் உண்டாகும்.

அனுஷம் : ஆசைகள் நிறைவேறும்.

கேட்டை : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உடன்பிறப்புகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் மற்றும் வியூகங்கள் அமைத்து செயல்படுத்துவீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : கனிவு வேண்டும்.

பூராடம் : முன்னேற்றமான நாள்.

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். பொருளாதார சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். நினைவாற்றல் மேம்படும். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.

திருவோணம் : சிக்கல்கள் குறையும்.

அவிட்டம் : நினைவாற்றல் மேம்படும

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் உள்ள சில பழைய நினைவுகளால் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். கடன்களை குறைப்பதற்கான முயற்சிகள் மேலோங்கும். உறவினர்களால் சுபச்செலவுகள் உண்டாகும். வாகனங்களில் ஏற்படும் பழுதுகளால் விரயச்செலவுகள் நேரிடலாம். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அவிட்டம் : கவலைகள் குறையும்.

சதயம் : முயற்சிகள் மேலோங்கும்.

பூரட்டாதி : செலவுகள் நேரிடலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தாமதப்பட்ட செயல்கள் கைகூடி வரும். தொழில் சம்பந்தமான பயணங்களால் இலாபம் உண்டாகும். வெளியூர் பணிகளால் ஆதரவும், அறிமுகமும் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : தடைகள் அகலும்.

உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

ரேவதி : எண்ணங்கள் மேலோங்கும்

•┈┈•❀??????❀•┈┈•