*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 26_*
*11.07.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*?மேஷம் ராசி*
உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : விவேகம் வேண்டும்.
பரணி : மனச்சோர்வு உண்டாகும்.
கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
*?ரிஷபம் ராசி*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : சுபிட்சம் உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.
*?மிதுனம் ராசி*
பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றும். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : இன்னல்கள் நீங்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
*?கடகம் ராசி*
வழக்கு விவகாரங்களில் இழுபறியான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீர் நிலை சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மனவருத்தங்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : இழுபறி உண்டாகும்.
பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
ஆயில்யம் : கவனத்துடன் இருக்கவும்.
*?சிம்மம் ராசி*
பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சிந்தையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பெற்றோர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : சுப விரயங்கள் ஏற்படும்.
*?கன்னி ராசி*
தொழில் திறமையால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் ஆதாயமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருட்சேர்க்கை உண்டாகலாம். நண்பர்களிடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆதாயமான நாள்.
சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.
*?துலாம் ராசி*
சமூகசேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். வாகன வசதி மேம்படும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : சாதகமான சூழல் உண்டாகும்.
சுவாதி : புத்துணர்ச்சி பிறக்கும்.
விசாகம் : பொறுப்புகள் உயரும்.
*?விருச்சகம் ராசி*
புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
*?தனுசு ராசி*
இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : மேன்மையான சூழல் அமையும்.
உத்திராடம் : புதிய லட்சியம் பிறக்கும்.
*?மகரம் ராசி*
தாய்மாமன்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகத்தில் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
*?கும்பம் ராசி*
செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தமான பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : ஆசிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : சிக்கல்கள் நீங்கும்.
*?மீனம் ராசி*
பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்கவும். புதிய முடிவுகளை எடுக்கும் போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : அமைதி காக்கவும்.
உத்திரட்டாதி : ஆலோசனைகளை கேட்கவும்.
ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்.
?????????
?????????
