*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 26_*

*09.06.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். கடல் சார்ந்த வேலைவாய்ப்புகளால் மேன்மை உண்டாகும். நிர்வாகம் சம்பந்தமான துறையில் நீங்கள் செய்யும் மாற்றங்களால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : சாதகமான நாள்.
பரணி : நட்பு வட்டம் பெருகும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களால் சில காரியத்தடைகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். செய்யும் பணியில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : காரியத்தடைகள் உண்டாகும்.
மிருகசீரிடம் : கவனத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். பூமி விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் திறமையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மிருகசீரிடம் : கலகலப்பான நாள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் சாதமாக செயல்படுவார்கள். தொழில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : ஆசிகள் கிடைக்கும்.
பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரம் : வெற்றி காண்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைக்க காலதாமதமாகும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். பயணங்களால் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : பதற்றமின்றி செயல்படவும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : ஆர்வம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனைகளில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் கையாளும் புதிய அணுகுமுறையால் இலாபம் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : மகிழ்ச்சி பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழிலை அபிவிருத்தி செய்ய கடனுதவிகள் கிடைக்கும். கண் சம்பந்தமான உபாதைகள் குறையும். நண்பர்களுடன் சேர்ந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அனுஷம் : கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.
கேட்டை : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை குறையும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்கிடையே இருந்த மன வருத்தங்கள் குறையும். பிறரின் செயல்களை விமர்சிப்பதை தவிர்க்கவும். விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பணிச்சுமை குறையும்.
பூராடம் : மன வருத்தங்கள் குறையும்.
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். வேலையாட்களிடம் அமைதியுடன் செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
திருவோணம் : அமைதியுடன் செயல்படவும்.
அவிட்டம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வியாபாரத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் அமையும். வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : செயல்வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனுகூலமான சூழல் அமையும். சக பணியாளர்களிடம் நிதானம் வேண்டும். பங்காளி வகை உறவினர்களின் மூலம் மேன்மை உண்டாகும். சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•