*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_தை 26_*

*09.02.2020*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதால் மனதில் உள்ள கவலைகள் குறையும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணி சம்பந்தமான பயணங்கள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : கவலைகள் குறையும்.

பரணி : மகிழ்ச்சியான நாள்.

கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

சாதுர்யமான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சுயதொழில் புரிவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். அரசு அதிகாரிகளிடம் அமைதிப்போக்கினை கடைபிடிப்பதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.

ரோகிணி : இன்னல்கள் குறையும்.

மிருகசீரிஷம் : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மை அடையும். நீர்வழி தொழில் மூலம் இலாபம் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வாகன திரவியங்கள் விற்பனை செய்வோர்க்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். இளைய சகோதரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளால் மாற்றமான சூழல் உண்டாகும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வேலை சம்பந்தமான முயற்சிகள் எண்ணிய முடிவை தரும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். அரசு அதிகாரிகளின் ஆதரவால் நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகள் முடியும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

பூரம் : முடிவுகள் சாதகமாகும்.

உத்திரம் : இழுபறி நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் சாதகமாகும். கல்வி பயிலும் மாணவர்களின் புலமைகள் வெளிப்படும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பிள்ளைகளால் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

அஸ்தம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

சித்திரை : புலமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

சுவாதி : நிதானம் வேண்டும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வாரிசுகள் தந்தையின் தொழிலில் புதுவிதமான மாற்றம் செய்து தந்தைக்கு உதவியாக இருப்பார்கள். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். மனை தொடர்பான காரியங்களில் இலாபம் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

விசாகம் : மாற்றம் உண்டாகும்.

அனுஷம் : முடிவுகள் சாதகமாகும்.

கேட்டை : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். மனைவிவழி உறவினர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு காலதாமதமான ஆதரவு உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.

பூராடம் : ஆதரவு உண்டாகும்.

உத்திராடம் : வாதத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

துரிதமான செயல்பாடுகளால் எண்ணிய இலக்கை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : எண்ணிய இலக்கை அடைவீர்கள்.

திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தொழிலில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூரட்டாதி : எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

திருமண வரன்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.

உத்திரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.

ரேவதி : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•