*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆவணி 22_*

*08.09.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். பொருட்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : ஆதாயம் உண்டாகும்.

பரணி : இலாபம் கிடைக்கும்.

கிருத்திகை : ஆதாயமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தலைமை பதவியில் உள்ளவர்களிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : நிதானம் வேண்டும்.

மிருகசீரிடம் : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வாரிசுகளுக்கு இடையே அனுசரித்து செல்லவும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் குறையும். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவினால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : அனுசரித்து செல்லவும்.

திருவாதிரை : காரியசித்தி உண்டாகும்.

புனர்பூசம் : சிக்கல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.

பூசம் : தரிசனம் கிடைக்கும்.

ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் காணாத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் ஏற்படும். தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சிந்தனைகள் மேலோங்கும்.

பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

விவாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.

அஸ்தம் : சேமிப்பு அதிகரிக்கும்.

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்கள் மீதான மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். உங்கள்து தனித்திறமைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். சம வயதினரிடம் கவனத்துடன் இருக்கவும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : மதிப்புகள் உயரும்.

சுவாதி : ஞானம் மேம்படும்.

விசாகம் : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தனவரவில் இருந்து வந்த தடைகள் அகலும். கூட்டாளிகளிடம் அமைதிப்போக்கினை கடைபிடிக்கவும். தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தடைகள் அகலும்.

அனுஷம் : முன்னேற்றமான நாள்.

கேட்டை : வாய்ப்புகள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வெளியூர் பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். பொதுச் செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சங்கீத பயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : கீர்த்தி உண்டாகும்.

உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் துறையில் உண்டான போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். சக பணியாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திராடம் : வெற்றி உண்டாகும்.

திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பேட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சதயம் : இலாபம் கிடைக்கும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். தர்க்க விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி : தன்னம்பிக்கை உண்டாகும்.

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•