நூடுல்ஸ் தற்போது நகர்புரம் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் பிரபலமான உணவாக மாறி வருகிறது. அனைத்து கடைகளிலும் கிடைக்கும் இந்த நூடுல்ஸ் தயாரிப்பு மிக எளிமையானது. இதற்குத் தேவையான மூலப் பொருள்களான கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, ஸ்டார்ச் மாவு மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து, நூடுல்ஸ் தயாரிப்புக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் நிரப்பினால் நாம் விரும்பிய வடிவில், சைஸில், கலரில் நூடுல்ஸ் ரெடி. இனி அதனை காய வைத்து, பேக்கிங் செய்து விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.

மிகக் குறைந்த அளவிலான நூடுல்ஸ் தயாரிப்பு இயந்திரத்தின் விலை சுமார் ரூ.40 ஆயிரம். மிகத் தரமான அதிகளவில் நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்ய விரும்புபவர்கள் ரூ. 1.5 லட்சத்தில் உள்ள அதிக திறனுடைய இயந்திரத்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.