பிளாஸ்டிக் ஓழிப்பு நடவடிக்கைகளை நாடு முன்னெடுத்து செல்லும்போது, மக்களும் அதற்கான மாற்று நடைமுறைகளை பின்பற்றத் தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் கலர்கலரான டிசைன் டிசைனான சணல் மற்றும் காகிதப் பைகள். தற்போது மருத்துக்கடைகள், ஜவுளிக்கடைகள், ஜூவல்லரிஸ் தொடங்கி காய்கனிக் கடை வரை இந்த வகைப் பைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

சணல் பை தயாரிப்பு மிக எளிதான தொழிலாகும். வெறும் 500 சதுர அடி பரப்பளவில் இந்த தொழிலை மேற்கொள்ளலாம். முதலீடு ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை போதும். ஆனால் காகிதப் பை தயாரிப்பு கொஞ்சம் காஸ்ட்லியான தொழில்தான். காகிதப் பை தயாரிப்பு இயந்திரத்தின் விலை ரூ. 5 லட்சம் வரை ஆகும். ரூ.3 லட்சத்திலும் காகிதப் பை தயாரிப்பு மெஷின்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் அதிக அளவிலான மனித உழைப்பும் தேவைப்படும்.