
தமிழகத்தில் முழு ஊரடங்கு தொடர்ந்து வரும் வேளையில் 1/06/2021 முதல் மொத்த வணிக கடைக்கு தளர்வுகளை அரசு அறிவிக்க தளர்வுக்கு முதல் நாளான இன்றே ஊரடங்கு விதிமுறைகளை மீறி வணிக கடை உரிமையாளர்கள் பால்மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்ய தொடங்கினர்.அதற்கேற்றார்போல் விதிமுறை மீறி செவ்வாய்ப்பேட்டை பால்மார்க்கெட் பகுதியை நோக்கி இரு சக்கர வாகனங்களிலும், கார் மற்றும் டெம்போகளிலும் மளிகை பொருட்களை வாங்க மக்கள் பலரும் படையெடுக்க இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள் அபராதம் விதிக்க தொடங்கினர்.அப்போது சிலர் நாளை திறக்க வேண்டிய கடைகளை இன்றைய திறந்து வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்காமல் வாங்க வந்த எங்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பது சரியா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது உங்கள் பகுதிக்கு வாகனங்களில் மளிகை பொருட்கள் வரும்போது இப்படி ஏன் இங்கு வருகிறீர்கள் என்று புத்திமதியும் கண்டிப்புடன் கூறினார்கள்.அதே சமயம் நான்கு சக்கர வாகனங்களான கார்களும் அவ்வழியே எவ்வித அபராதமுமின்றி பயணிக்க பொதுமக்கள் பலரும் கையை காட்டிக்கொண்டு முகம் சுளித்து முணுமுணுத்து சென்றனர்.
