மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் முப்பெரும் விழா

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக ஜாதி மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு முப்பெரும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சேலம் நிலவாரப்பட்டி தொன்போஸ்கோ அரவணைப்பு இல்லத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சேலத்து பாரதி சொல்லரசர் வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்க தேசிய தலைவர் டிஆர் கவியரசு, மக்கள் சட்ட உரிமைகள் கழகம் பொதுச்செயலாளர் யூ வசந்த் முன்னிலை வகித்தனர். தேசிய செயலாளர் வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், வழக்கறிஞர் கே. சுரேஷ்குமார், சேலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வழக்கறிஞர் எம் ராஜா, மாநில மகளிரணி நிர்வாகச் செயலாளர் கிருத்திகா கலந்து கொண்டனர். மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஒ டெக்ஸ் இளங்கோவன், விஜயானந்த், சி பாபு, பேராசிரியர் ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மனித உரிமைகள் தினம், மகாகவி பாரதியார் தினம், ஆர்வி பாபு பிறந்த தினம் ஆகிய மூன்று விழாவும் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. தொன்போஸ்கோ அரவணைப்பு குழந்தைகளுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள 42 மெத்தைகள், இனிப்புகள் மற்றும் மதிய உணவுகளும் பரிமாறி விழா இனிதே நடைபெற்றது. விழாவில் சேலம் மாவட்ட மக்கள் சட்ட உரிமை கழகம் மற்றும் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்தனர். சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கோவி முருகன் நன்றியுரை கூறினார்.
சமூக சேவகர் R.V.பாபு அவர்களுக்கு www.oursalem.com சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
