தேவையானவை:

பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 1 கட்டு
தேங்காய் துருவல் –  6 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1
சீரகம்   – 1 ஸ்பூன்

புளிக்காத தயிர் – ஒரு கப்
கடுகு – 1  ஸ்பூன்
உளுத்தம்பருப்பு –  1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
தேங்காய், சீரகம்  பச்சை மிளகாயை நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.முளைக்கீரையை வேகவைத்து
கீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது, தயிர் சேர்த்துக் கலக்கவும்.

எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துக் சேர்த்துக் கலக்கவும்.
சுவையான  முளைக்கீரை தயிர்க்கூட்டு  ரெடி.