சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை வரும் 27-ம் தேதி அறிவிப்பேன் என்று எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.