தேவையான பொருட்கள்:
- ½ கிலோ நெத்திலி மீன்
- 25 கிராம் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் சீரக தூள்
- உப்பு
- ¼ ஸ்பூன் ஓமம்
- கறிவேப்பில்லை
- 5 பூண்டு
- 25 கிராம் சோள மாவு
- 10 கிராம் அரிசி மாவு
- 1 முட்டை வெள்ளை கரு
செய்முறை:
நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பில்லை, நசுக்கி பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும்.
மீன் கலவையை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த பிறகு, அதில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
சுவையான நெத்திலி மீன் வறுவல் ரெடி….
