புதினா சட்னி இட்லி மற்றும் தோசைக்கு மட்டும் அல்ல சிக்கன், கபாப், சாதம் போன்றவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.
புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- 1 ½ ஸ்பூன் கடலை பருப்பு
- 5 காய்ந்த மிளகாய்
- 400 கிராம் புதினா
- புளி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- 50 கிராம் இஞ்சி
- 100 கிராம் தேங்காய்
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 300 கிராம் உளுந்து
- 5 பச்சை மிளகாய்
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 100 கிராம் கொத்தமல்லி
- 10 பூண்டு பல்
புதினா சட்னி செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணி சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை எடுத்து, கொதித்து அவற்றை குளிர்ந்த நீரில் போட்டுக் கொள்ளவும்.
தாளிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.
பிறகு வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும், பிறகு உறவைக்காத்த புளியை சேர்த்து வறுக்கவும்.
அடுத்தது தேவையான அளவு உப்பு, தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
குளிர்ந்த நீரில் வைத்துள்ள புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
