தேவையான பொருட்கள்:

  • 1 கப்  பூரி துண்டுகள்
  • ½ கப்  நொறுக்கிய சிப்ஸ்
  • 2 கப்  பொரி
  • 2 ஸ்பூன்  துருவி கேரட்
  • 1 ½ ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1 ½ ஸ்பூன் மாங்காய், வெள்ளரிக்காய் துருவியது
  • 1 ஸ்பூன் மல்லிதழை நறுக்கியது
  • 1ஸ்பூன் தக்காளி பொடியாக நறுக்கியது
  • ½ கப்  ஓமப்பொடி
  • உப்பு
  • 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ½ ஸ்பூன் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு
  • புதினா – 3 மேசைக்கரண்டி
  • பூண்டு சட்னி – 2 மேசைக்கரண்டி
பூண்டு சட்னி:
  • பூண்டு – 15 பல்
  • புளி – சிறிது
  • சீரகம் – 1 /2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு – 1 தேக்கரண்டி

பேல் பூரி செய்முறை: 

பூண்டு சட்னி செய்வதற்கு பூண்டு, புளி, சீரகம், மிளகாய்த்தூள், உப்பு, இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

           ஓமப்பொடி செய்வதற்கு கடலை மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

           ஓமப்பொடி அச்சைப் பயன்படுத்தி மாவைப் பிழிந்து சூடான எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

           ஒரு அகலமான பாத்திரத்தில் நொறுக்கி வைத்துள்ள பூரி, சிப்ஸ், பொரி மற்றும் பாதி ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.

           தயாராக வைத்துள்ள காய்கறிகள், தூள்கள் மற்றும் சட்னி அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும்.

           மீதமுள்ள ஓமப்பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி உடனடியாகப் பரிமாறவும்.