13.06.2020 சேலம் மாநகரம் பொன்னம்மாபேட்டை ரயில்வே இரண்டாவது கேட் அருகில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம், புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை, விசுவ ஹிந்து பரிசத் இணைந்து 5000 குடும்பங்களுக்கு ஹோமியோபதி எதிர்ப்புச் சத்து மாத்திரை சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் புதிய வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் ஜீவி தனபால் தலைமை தாங்கினார். மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மாநில நிர்வாக குழு அமைப்பாளர் கே தேவராஜ், மாநில இளைஞரணி நிர்வாகச் செயலாளர் #ஆர்_வி_பாபு, சேலம் மாவட்ட ஆன்மீக அணி அமைப்பாளர் சிட்டிபாபு, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ரேஷ்மா, அகழி அறக்கட்டளை தியாகு, அதிகாரப்பட்டி பிரகாஸ், உடையாப்பட்டி அஸ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவ அழைப்பாளராக மருத்துவர் R.அன்பரசி BHMS MD(AM) கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட மண்டல கோட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் VHP மாவட்ட துணைத்தலைவர் அங்குராஜ் அவர்கள் அறுசுவை விருந்து வழங்கினார். வருகை புரிந்த முக்கிய நிர்வாகிகள் பங்கு பெற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர். புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் அனைத்து பொது மக்களிடமும் முக கவசம், சமூக இடைவெளி மற்றும் ஹோமியோபதி மாத்திரையை உபயோகிக்கும் முறையை மிகச்சிறப்பாக எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்பகுதி மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்தது. விழா இனிதே நிறைவடைந்தது.

