ஜுன் 14 – 2020 உலக இரத்த தான தினந்தை முன்னிட்டு ஏ கே சமூக நல அறக்கட்டளை சார்பாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் முன்னிலையில் உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சாரதி சீனுவாசன், சத்திஷ், மோகன்குமார், லோகேஸ், மூா்த்தி, தீனா, ஹரி, அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.