சேலத்தில் நேற்றிலிருந்து வெயிலின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது சேலம் முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் வெயிலின் உக்கிரம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
