சேலத்தில் நேற்று இரவு முதல் காலை வரை கன மழை கொட்டி தீர்த்தது. வெப்ப சலனம் காரணமாக சேலத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே நேற்று இரவு 7 மணிக்கு எதிர்பாராத வகையில் மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலத்தில் மட்டும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு 14 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது .கன மழை காரணமாக காந்தி விளையாட்டு மைதானம் ,பழைய பேருந்து நிலையம் ,மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.தற்போது மழைநீரை வடிகட்டும் பணி நடைபெறுகிறது.