நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்பார்கள் அதற்கேற்றாற் போல் நோய் வருவதற்கு முன்பு அதை தடுக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த தடுப்பூசி. அந்தக் காலத்தில் இருந்து உலகையே அச்சுறுத்தி வந்த போலியோ மற்றும் தட்டம்மை போன்ற கொடூரமான நோய் பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றியதும் இந்த தடுப்பூசிகள் தான். ஏன் இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பில் இருந்தும் நம்மை காக்க கூடியது தடுப்பூசிகள் தான். ஆனால் இந்த தடுப்பூசிகள் போடப்படுவது பற்றி எல்லாருக்கும் தெரியும். நம்முடைய சிறுவயதில் ஒவ்வொரு மாதத்திற்கு ஏற்ற வகையில் நிறைய தடுப்பூசிகளை போட்டு இருப்போம். இந்த தடுப்பூசிகள் நம்மை பலதரப்பட்ட நோயிலிருத்து பாதுகாக்கிறது. ஆனால் இந்த தடுப்பூசிகள் நம் உடலில் எப்படி வேலை செய்கிறது என்பது தெரியுமா, நம்மை நோயிலிருத்து எப்படி பாதுகாக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்.
தடுப்பூசி என்றால் என்ன
தடுப்பூசி குறிப்பிட்ட நோய்களைக் கண்டறிந்து போராட உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பயிற்றுவிக்கிறது. உதாரணமாக ஒரு போர் தொடங்குவதற்கு முன்பு உங்கள் இராணுவத்தை தயார்படுத்துவதை போன்றது. அதாவது நம் உடலில் நோயெதிரிப்பு சக்தியான வெள்ளை அணுக்களை போர் வீரர்கள் மாதிரி தயார்படுத்தி போர்க்களத்தை பார்ப்பதற்கு முன்னரே எதிரியான நோய்க் கிருமிகளை அடையாளம் கண்டு வெளியேற்றுகிறது. இது இயற்கையான பாதுகாப்பை கொடுக்கிறது. இது ஒருங்கிணைந்த முயற்சி ஆகும்.
நமக்கு போடப்படும் தடுப்பூசிகள் ஆன்டிஜென்களால் ஆனவை. எனவே தடுப்பூசி போடப்படும் போது நோய்க்கிருமிகள் மாதிரியான ஆன்டிஜென்கள் உள்ளே நுழைகின்றன. அதே நேரத்தில் இந்த தடுப்பூசி ஆன்டிஜென்களை கண்டறிந்து அதற்கான இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் ஆன்டி பாடிகளையும் உருவாக்குகிறது. இதனால் கிருமிகளை அழிக்க போர் தொடங்குகிறது. இது ஒரு சாம்பிள் தான். எனவே மறுபடியும் அதே வகையான நோய்க்கிருமி உங்க உடலினுள் நுழையும் போது இரத்த வெள்ளை அணுக்களை (இராணுவ வீரர்கள்) ஒன்று திரட்டு படையெடுக்க ஆரம்பித்து விடும். எனவே தடுப்பூசி உங்களை நோய்களிடமிருந்து காக்க உதவுகிறது.
நோயெதிரிப்பு அமைப்பு
நாம் தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்பு மனித உடலின்
நோயெதிரிப்பு மண்டலத்தை பற்றி பார்ப்பது உதவியாக இருக்கும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் வரும்போது, அவை தாக்குதலைத் தொடர்கின்றன. சரிபார்க்கப்படாமல் விட்டால், அவை பெருகி பரவக்கூடும், இதனால் பெரும்பாலும் நமக்கு நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது.
காய்ச்சல் எப்படி வருகிறது
குளிரான சூழலில் வாழும் நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக நமது உடல் இயற்கையாக ஒரு உஷ்ணத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தொற்று ஏற்பட்ட உடன் நமது உடல் பல்வேறு வகையான வெள்ளை அணுக்களை உருவாக்குகிறது. இந்த செல்கள் இராணுவப் படையை போல செயல்பட்டு ஆன்டிஜென் எனப்படும் ஒரு குறிப்பிட்ட இலக்குகளை தேடுவதன் மூலம் கிருமிகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றன.
ஆன்டிஜென்கள்
ஆன்டிஜென் என்பது நோய்க்கிருமிகளின் மேல் உறை அல்லது ஒரு துண்டு போன்ற புரதம் ஆகும். நமது வெள்ளை அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் இந்த ஆன்டிஜனை கண்டறிந்து அதன் உறையை கழற்றி கிருமிகள் பெருக விடாமல் தடுக்கிறது. தொற்று நீங்கியதும் நமது நோயெதிர்ப்பு அமைப்பு இந்த ஆன்டிஜெனை ஞாபகம் வைத்துக் கொள்ளும். மறுபடியும் இந்த வைரஸ் தாக்கும் போது எளிதாக எதிரியை அடையாளம் கண்டுபிடித்து போட்டுத் தள்ளி விடும். இதே தான் தடுப்பூசி தொழில் நுட்பத்திலும் பயன்படுகிறது. நம் நோயெதிரிப்பு அமைப்பு எந்த ஆன்டிஜெனை கண்டறிகிறது என்பதன் மூலம் பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்க முடியும்.
தடுப்பூசி போடப்படும் வழிமுறைகள்
சில தடுப்பூசிகள், எடுத்துக்காட்டாக, தசைகளில் 90 டிகிரி கோணத்தில் செலுத்தப்பட வேண்டும், மற்றவை தோலில் உள்ள தசைக்கு இடையிலான கொழுப்பு திசுக்களில் 45 டிகிரி கோணத்தில் கொடுக்கப்பட வேண்டும். பொதுவாக பெரியவர்களுக்கு கையிலும் குழந்தைகளுக்கு தொடையிலும் தடுப்பூசி போடுவார்கள். சில தடுப்பூசிகள் ஊசியாக போடப்படாமல் மூக்கு அல்லது வாய் வழியாக கொடுப்பார்கள். ரோட்டா வைரஸ் போன்ற வயிற்றுப்போக்கு நோய்க்கு எதிரான தடுப்பூசி வாய்வழியாக வழங்கப்படலாம்.
தீங்கை குறைத்தல்
தடுப்பூசி போடப்படுவதால் மட்டும் நமக்கு 100 % நோயெதிரிப்பு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தமல்ல. தடுப்பூசி நோய்க்கு எதிராக வெள்ளை அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகளை உருவாக்க உதவுகிறது. ஆனால் வாழ்நாள் முழுவதும் இது நோயெதிரிப்பு சக்தியை உறுதிப்படுத்தாது. எனவே காலப்போக்கில் இதன் செயல்திறன் குறையலாம் அல்லது மங்கலாகலாம். இருப்பினும் இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் தடுப்பூசி போடப்படும் நோயை ஏற்கனவே நம் நோயெதிரிப்பு மண்டலம் கண்டறிந்து இருப்பதால் அதே நோய் உங்களை தாக்கும் போது எளிதில் கண்டறிந்து அதை குறைக்க முடியும். இதுவே தடுப்பூசி போடப்படாத நபருக்கு நோய் குறைவு கடினம்.