
தமிழகம் முழுக்க பெட்ரோல் டீசல் விலையுயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம். சேலம் மாவட்ட தேமுதிக சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சமையல் எரிவாயு மற்றும் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
