வழிப்பறி கொலை மிரட்டல் மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் சரகத்தில் கடந்த 16/02/19 ஆம் தேதி செயின் பறிப்பு மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் அன்னதானப்பட்டி போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்ட சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரை சேர்ந்த ரவுடி விஜிக்கு வழிப்பறி, கொலை மிரட்டல், செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு அன்னதானப்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளது. எதிரி ஒரு வழக்கில் அபராதம் செலுத்தியும், மற்ற வழக்குகளில் ஒவ்வொரு முறையும் பிணையில் வெளியே வந்து தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொது மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டான். எனவே அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் திரு. குமார் அவர்கள் பரிந்துரையின்படி, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் திரு. பி. தங்கதுரை சட்டம் ஒழுங்கு அவர்களின் சிபாரிசின் படி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.K.சங்கர் IPS அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க 22/03/19ஆம் தேதி ஆணை பிறப்பித்தார்.

