கொலை குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பாராட்டு
சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் சரகம் நெத்திமேடு, KP கரடு, காந்தி நகரில் கள்ளக்காதல் தகராறில் தன்னிடம் கூலி வேலை செய்யும் பெண் தொழிலாளியை கொலை செய்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் 25. 3 .19ஆம் தேதி இரவு வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் திரு. குமார் அவர்கள் தலைமையில் SI. திரு. பெரியசாமி, SI. திரு.சம்பத் SI. திரு.அன்பரசன் மற்றும் நுண்ணறிவு பிரிவு SSI திரு. ராஜ்குமார் ஆகியோர்கள் அடங்கிய குழு 26. 3.19ஆம் தேதி காலை கொலை குற்றவாளி ரவி வயது 58 த/பெ முத்துசாமி,கிருஷ்ணன் தெரு, அரிசிபாளையம், சேலம் என்பவரை கைது செய்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த அன்னதானப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் குமார் மற்றும் காவல் ஆளிநர்களை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டி ஊக்குவித்துள்ளார்.

