சேலத்தில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் 4 மாவட்ட வணிகர்களுடன் ஆன கலந்தாய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சேலம்,நாமக்கல்,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர். கூட்டத்திற்குப்பின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார். அப்போது அவர் தேர்தல் அறிக்கை சொல்லாத பல திட்டங்களை முதல்வர் செய்துள்ளார் .கடந்த ஆட்சி 5 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுள்ளது .மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் வணிகர் என்ற போர்வையில் அரசை ஏமாற்றும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆட்சியில் ஆள்மாறாட்டம் போலி பத்திர பதிவு உள்ளிட்ட தவறுகள் நடந்துள்ளதை களையெடுக்க சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்தார். தவறான பத்திர பதிவுகள் மீது உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேடுகளில் ஈடுபடும் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  வருவதாக கூறினார் .மேலும்  இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என்று பொதுமக்களை கேட்டு கொண்டு நேரடியாக ஆன்லைன் மூலம் முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார் .பத்திரப்பதிவை மேலும் ஏளிமையாக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது பத்து நிமிடத்திற்குள் பொதுமக்கள் பத்திரத்தை பதிவு செய்யும் அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.