

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது .அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் 55 நாட்களுக்கு பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் ஏராளமான கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்ட பிறகு டாஸ்மாக் கடைகளில் ஒன்று இரண்டு பேர் மட்டுமே மது வாங்கி செல்கின்றனர். கூட்டம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து டாஸ்மார்க் கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில் தட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன . மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காவல் போடப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை என்பதால் மது பிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
