இன்று சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் அருள் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  3வது கோட்டம் தெய்வானை நகர்,அவ்வை நகர், மோளகரட்டு காடு ஆகிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து சாக்கடை வசதி, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனை ஆகிய குறைகளை கேட்டறிந்து உடனடியாக அந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்தார் .மேலும் 18வது கோட்டம்  தாயங்கரடு பகுதியில் புதியதாக அமையவுள்ள  செல்போன் டவர் குறித்து மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்  நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் மக்களை பாதிக்கும் எந்த திட்டமும் செயல்படுத்த விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தார்…