பல சமயங்களில்
இப்படித்தான்
நேர்ந்து விடுகிறது.
நேர்ச்சைக்காக
துக்க மரங்களில்
வெளவால் பட்டாம்பூச்சிகள் .
பனிக்குடம்
பெருக்க
பால் குடம்
சுமக்கும்
கபாலங்கள்
தருமியின்
பாடலை விட
தவறில்லாமல்தான்
எழுதுகின்றன.
ஆனாலும்
நக்கீரன்
குறை கூறிக் கொண்டேயிருக்கின்றான்.