இன்று சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏற்காடு பிரதான சாலையில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மரம் அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையானது இன்று பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரம் விழுந்ததை அறிந்த அஸ்தம்பட்டி காவல் நிலைய ரோந்து வாகன தலைமை காவலர் திரு.செல்வராஜ் மற்றும் முதல் நிலை காவலர் திரு.R.அசோகன் ஆகிய இருவரும் விரைவாக செயல்பட்டு சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். போலீசாரின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
