நம் தினசரி உணவில் ஊறுகாயைப் போல முக்கிய இடம் பிடிப்பது அப்பளம். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு. திருமணம், விருந்துகள் போன்றவற்றில் உணவுடன் சுவையான அப்பளம் காலங்காலமாக பரிமாறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

அப்பளம் தயாரித்தல் மிகவும் எளிய வீட்டிலேயே செய்யக்கூடிய குடிசைத் தொழிலாகும். இதிலும் உளுந்து அப்பளம், கிழங்கு அப்பளம், அரிசி அப்பளம், கோதுமை அப்பளம் என பல்வேறு வகைகள் உள்ளன. பொதுவாக இது மிகவும் போட்டி நிறைந்த தொழிலாகும். ஆனால் சிறு தொழிலாக செய்பவர்கள் சுமார் ரூ.30 ஆயிரம் முதலீட்டில் எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பேக்கிங் செய்து அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.