வெட்டுக்கிளிதான் அடுத்த பிரச்சினையாக நாட்டில் உருவாகும் எனக் கருத்துகள் நிலவி வரும் சூழலில்,மனிதர்களால் வெட்டுக்கிளிக்கு ஏற்படும் பெரும் ஆபத்து ….

           வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க அரசு பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் கோடிக் கணக்கில் உருவாகி விவசாயப் பயிர்களை நாசமாக்கி வருகின்றன என்ற செய்தி வெளியானது. இந்த வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ளது.

இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த சமையல் முறை குறித்து தனியார் உணவகம் ஒன்றின் உரிமையாளர் பத்திரிகைகளுக்குப் பேட்டியும் அளித்து வருகிறார்.

அவர் கூறுகையில், “வெட்டுக்கிளியைச் சமைப்பதற்கு முன் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக அதன், கால், இறக்கைகளை நீக்கிவிட வேண்டும்” என்கிறார்.

விவசாய பயிர்களுக்கு பெரும் சவாலாகவும் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்திவிடும் என வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.