போளி  செய்ய தேவையான பொருட்கள்:

  •  1 கப்  கடலைப்பருப்பு
  •  1 கப்  வெல்லம்
  •  1 கப்  மைதா மாவு
  •  ½ ஸ்பூன்  ஏலக்காய்பொடி
  •  5 முந்திரிப்பருப்பு
  •  ½ ஸ்பூன்  நெய்
  •  ½ ஸ்பூன்  ஏலக்காய்பொடி
  •  மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

போளி  செய்முறை:

            மைதா மாவை சிறிது நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து, 2 தேக்கரண்டி எண்ணெய், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து மேலும் பிசைந்து தனியே வைக்கவும்.

           கடலைப்பருப்பை சிறிது நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கையால் அழுத்தினால் அழுந்துகிற பதம் வந்தவுடன், தண்ணீரை வடித்து விடவும்.

           இதனுடன் வெல்லத்தூள், தேங்காய் துருவல் , ஏலக்காய் பொடி இவற்றைப் போட்டு மறுபடியும் அடுப்பில் வைத்து , 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

           கடலைப்பருப்பு, வெல்லம் சேர்ந்த கலவையை மைய அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதில், முந்திரிபருப்பை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

           பிசைந்து வைத்துள்ள மைதா மாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக உருட்டி எண்ணெய் தடவிய பாலிதீன்பை மீது வைத்து ஓர் அப்பளம் அளவுக்கு மெல்லியதாகத் தட்டவும்.

           ஓர் எலுமிச்சை அளவு அரைத்த கடலைப்பருப்பு விழுதை உருட்டி, இந்த அப்பளத்தின் நடுவில் வைத்து, அப்பளத்தால் மூடி மறுபடியும் சமமமாக 1 /4 அங்குல கனத்துக்கு போளியாகத் தட்டிக் கொள்ளவும்.

            தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் போளியை அதில் போட்டு சிறிது நெய் விட்டுத் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சுவையான போளி தயார்…