ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  •  ½ kg சிக்கன்
  •  2 வெங்காயம்
  •  2 தக்காளி
  •  2 கப்  பாசுமதி அரிசி
  •  2 ஸ்பூன்  இஞ்சி பூண்டு விழுது
  •  புதினா, கொத்தமல்லி
  •  4 ஏலக்காய்
  •  4 லவங்கம்
  •  பட்டை – 2 துண்டு
  •  1 பிரியாணி இலை
  •  2 ஸ்பூன்  மிளகாய் தூள்
  •  2 பச்சை மிளகாய்
  •  ½ ஸ்பூன்  பிரியாணி மசாலா தூள்
  •  ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
  •  5 ஸ்பூன்  எண்ணெய்
  •  1 கப்  தயிர்
  •  உப்பு

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்முறை:

           முதலில் அரிசியை கழுவி ஊற வைத்து பாதி பதமாக வேக வைத்து எடுக்கவும்.

            பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

            இதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

            பின்பு அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.தக்காளி நன்றாக குழைந்ததும் எலுமிச்சை சாறு, தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

            மிளகாய் தூள் பச்சை வாசம் போனதும் தயிர் சேர்த்து பிரட்டவும். எல்லாம் நன்றாக கலந்து எண்ணெய் பிரிந்து வரும்.

            இப்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து பிரட்டி, மூடி வேக விடவும்.

            இப்போது பாதி பதமாக வடித்த சாதம் கலந்து மூடி தம்மில் போடவும்.

            அடுத்தது 15 நிமிடம் தம்மில் போட்டால் சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார்.