பெரும்பாலும் விரத நாட்களில் அல்லது இந்திய பண்டிகை நாட்களில், குறிப்பாக நவராத்திரி பண்டிகையின் போது செய்து சாப்பிடப்படுது இந்த க்ரீமியான இனிப்பு ரெசிபி.லாக்கி கீர் என்பது சுரைக்காய் மற்றும் பால் கொண்டு செய்யும் ரொம்ப எளிமையான ஒரு இனிப்பு வகை.
சுரைக்காய் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:
- 1 லிட்டர் பால்
- 1 கப் துருவிய சுரைக்காய்
- 1/4 கப் சீனி
- 2 தேக்கரண்டி கோயா
- 1 தேக்கரண்டி நெய்
- தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்
- தேவையான அளவு சிரோஞ்சி
- தேவையான அளவு உதிர்ந்த பாதாம்
- தேவையான அளவு உதிர்ந்த பிஸ்தா
சுரைக்காய் பாயசம் செய்முறை :
ஒரு பானில் 2 டீஸ்பூன் நெய் விட்டு ஃப்ரஷ்ஷான துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வதக்குங்க. சுரைக்காயை மெல்லிசாக துருவிக்கொண்டு அதிலிருந்து வடியும் கூடுதல் நீரை பிழிந்து எடுத்துடனும்.
இப்போது, ஒரு பானில் பாலை ஊற்றி காய்ச்சுங்க. பால் சுண்ட காய்ச்சி திக்கானதும், அதில் சர்க்கரை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வேகவிடுங்க.
இப்போது, இந்த பாலில் கோவாவை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வேகவிடுங்க. சாரைப்பருப்பு, பாதாம் பிஸ்தா மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நல்ல திக்கான கன்சிஸ்டன்சிக்கு வரும் வரை 5 நிமிடங்கள் கொதிக்க வைங்க.

அடுப்பை அணைத்து, உங்கள் விருப்பத்திற்கேற்ப சூடாகவோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்து கூலாகவோ பரிமாறுங்க.
