நண்டு மசாலா ஒரு அசைவ உணவு. நண்டு பொதுவாக அனைத்து நாட்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் ஆகும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

நண்டு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

நண்டு – 1/2 கிலோ
வெங்காயம் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லியதூள் – 1 டேபிள் ஸ்பூன்
கறி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – 1 கப்
சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

நண்டு மசாலா செய்முறை:

                நண்டு மசாலா செய்ய முதலில் மிக்சியில் வெங்காயம்,பூண்டு,இஞ்சி மற்றும் மிளகாய்த்தூள் மற்றும் மேற்கூறிய அனைத்து மசாலா பொடிகளையும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது மசாலா தயார். தயாரான மசாலாவை ஒரு கின்னத்தில் வைத்து கொள்ளுங்கள்.
                பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மசாலாவை கடாயில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். பிறகு அதில் நண்டு அனைத்தையும் போட்டு வேகவிட வேண்டும்.
                   
                 நண்டு பாதி வெந்த நிலையில் தேங்காய்ப்பால் ஊற்றவும் பிறகு, முழுவதுமாக நண்டு மசாலா தயாராக 10 நிமிடங்கள் வரை ஆகும். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்தால் சுவையான நண்டு மசாலா தயார்.